Idhayam Matrimony

வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு - பதற்றம்

செவ்வாய்க்கிழமை, 23 டிசம்பர் 2025      உலகம்
Gun 2023-10-05

டாக்கா, வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அங்கும் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் புரட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது32) படுகொலையால் ஏற்பட்ட பதற்றம் மறைவதற்குள், வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் நேற்று சுடப்பட்டு உள்ளார். தேசிய குடிமக்கள் கட்சி என்ற கட்சியின் குல்னா பிரிவு தலைவரான மொதாலேப் ஷிக்தர் தென்மேற்கு குல்னா நகரில் மர்மநபர்களால் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளானார்.

தலையில் பலத்த காயமடைந்த அவர் குல்னா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தலையில் இருந்து பெருமளவில் ரத்தம் வெளியேறியதால் அவர் அபாய கட்டத்திலேயே இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷிக்தரை சுட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இது நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து