முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலில் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

புதன்கிழமை, 22 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : விவிபாட் ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும் தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

புதிதாக அறிமுகம்...

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள ஒப்புகை சீட்டு எந்திரத்தை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்தது. இந்த ஒப்புகை சீட்டு வாக்களிக்கும் போது சில வினாடிகள் அந்த எந்திரத்தில் தெரியும். பின்னர் எந்திரத்துடன் உள்ள பெட்டியில் சேமிக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடிகளை சேர்ந்த ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. உதாரணத்துக்கு ஒரு பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் இருந்தால் 30 வாக்குச்சாவடியில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு கடைசியில் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது. ஆனால் இதை முதலில் எண்ண வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஆகும்.

எந்த மாற்றமும் இல்லை...

ஒரு வாக்குச்சாவடியில் குளறுபடி காணப்பட்டாலும் சட்டசபைத் தொகுதியில் உள்ள அனைத்து சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பதிவு மற்றும் விவிபாட் அச்சிட்ட பதிவுகளை சரிபார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கையில் எந்தஒரு மாற்றமும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து