நன்றாக விளையாடினால் யாரையும் வீழ்த்துவோம் - கேப்டன் கோலி நம்பிக்கை

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      விளையாட்டு
kohli 2019 06 13

லண்டன் : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில், நன்றாக விளையாடினால் யாரையும் வீழ்த்துவோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2 ஆட்டங்களில்...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மேன்செஸ்டரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதுவரை விளையாடிய 3 லீக் ஆட்டங்களில் இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதேபோல் இதுவரை 4 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 1 வெற்றி, 2 தோல்வி அடைந்து, புள்ளிபட்டியலில் பின்தங்கியுள்ளது.

தலைசிறந்த அணியாக...

இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தானுடனான போட்டி மட்டுமல்ல, எங்களை பொறுத்தவரை அனைத்து போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். நன்றாக விளையாடினால் யாரையும் வீழ்த்துவோம். நன்றாக கிரிக்கெட் விளையாடுவதால் தான், நாங்கள் உலகின் தலைசிறந்த அணியாக திகழ்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து