முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிவேகத்தில் 3 ஆயிரம் ரன்கள்: விராட்கோலி சாதனையை முறியடித்தார் பாபர் ஆசம்

வியாழக்கிழமை, 27 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

பர்மிங்காம் : அதிவேகத்தில் 3 ஆயிரம் ரன்களை கடந்த பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் இந்திய கேப்டன் விராட் கோலி சாதனையை முறியடித்தார்.

10-வது சதம்...

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் பாபர் ஆசம். அவர் சிறப்பாக விளையாடி 101 ரன் எடுத்தார். 24 வயதான அவர் தனது 10-வது சதத்தை பதிவு செய்தார். பாபர்ஆசம் 29-வது ரன்னை எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 3 ஆயிரம் ரன்னை தொட்டார். தனது 68-வது இன்னிங்சில் அவர் 3 ஆயிரம் ரன்னை எடுத்தார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்தார். கோலி 75 இன்னிங்சில் 3 ஆயிரம் ரன்னை எடுத்து 2-வது இடத்தில் இருந்தார்.

சாதனை முறியடிப்பு...

ஹசிம் அம்லா 57 இன்னிங்சில் 3 ஆயிரம் ரன்னை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக பாபர் ஆசம் உள்ளார். ஏற்கனவே 1000 ரன் மற்றும் 2 ஆயிரம் ரன்னில் கோலியின் சாதனையை அவர் முறியடித்து இருந்தார். 24 வயதான பாபர்ஆசம் 68 இன்னிங்சில் 3072 ரன் எடுத்துள்ளார். சராசரி 52.96 ஆகும். அதிகபட்சமாக 125 ரன் குவித்துள்ளார்.

ஒரு நாள் போட்டியில் 3 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்த ‘டாப் 6’ பேட்ஸ்மேன்கள் வருமாறு:-

1. ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா)- 57 இன்னிங்ஸ்.
2. பாபர்ஆசம் (பாகிஸ் தான்)- 68 இன்னிங்ஸ்.
3. விராட்கோலி (இந்தியா)- 75 இன்னிங்ஸ்.
4. கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்)- 72 இன்னிங்ஸ்.
5. கேரிகிர்ஸ்டன் (தென் ஆப்பிரிக்கா)- 72 இன்னிங்ஸ்.
6. தவான் (இந்தியா)- 72 இன்னிங்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து