முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினின் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி: ஆப்கன் இளம் வீரர்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆப்கானிஸ்தான் இளம் வீரர் இக்ரம் அலி கில் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் இடையிலான லீக் ஆட்டத்தில் முதலில பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 300 ரன்களுக்கு மேல் குவித்தது. பின்னர் சேஸிங் செய்த ஆப்கானிஸ்தான் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் இளம் விக்கெட் கீப்பர் இக்ரம் அலி கில் சிறப்பாக விளையாடி 86 ரன்கள் குவித்தார். 18 வயதேயாகும் இக்ரம் அலி கில், இதன் மூலம் உலகக்கோப்பையில் இளம் வயதில் அதிக ரன்கள் குவித்து சச்சினின்  சாதனையை முறியடித்துள்ளார்.

இது குறித்து இக்ரம் கூறுகையில், ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிகபட்ச ஸ்கோராக 86 ரன்கள் அடித்ததில் சந்தோஷம். உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் 9 ஆட்டங்களில் விளையாடிள்ளன. இதில் யாருமே 86 ரன்களே தாண்டவில்லை. ஆனால், சதம் அடிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்த போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு சதம் அடிப்பதற்கான உத்வேகமாக இருக்கும்.  கிரிக்கெட் போட்டியில் லெஜெண்ட் ஆன சச்சினின் சாதனையை முறியடித்ததால் மிகவும் பெருமையடைகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இடது கை பேட்ஸ்மேனான நான், பேட்டிங் செய்ய வரும் போதெல்லாம் சங்ககராதான் என் மனிதில் இருப்பார். அவர்தான் என் ரோல் மாடல் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து