முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியேட்டரில் சினிமா பார்த்த ராகுலின் வீடியோ வைரல்

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி திரையரங்கு ஒன்றில் படம் பார்க்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

17-வது மக்களவைத் தேர்தலில் கண்ட தோல்வியை அடுத்து ராகுல் காந்தி அமைதியற்ற மனநிலையில் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் என்ற பதவியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்த ராகுல் காந்தி, ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார். ஆனால் அதை காரிய கமிட்டி நிராகரித்து விட்ட போதும் ராகுல் தன் முடிவில் பிடிவாதமாக இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் அனைத்து மட்டத்திலும் சீர்திருத்த மாற்றங்களை ராகுல் கொண்டு வர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் ராகுலின் முடிவை மாற்ற குடும்பத்தினரும், கட்சியினரும் எடுத்த முயற்சிகள் தோற்றன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் டெல்லியில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஆர்டிகிள் 15 என்ற இந்தி திரைப்படத்தை நண்பர் ஒருவருடன் அமர்ந்து ராகுல்  பார்த்தார். பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே அவர் அந்த படத்தை பார்த்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து