பதவியில் இருந்து விலகினார் மும்பை காங். தலைவர் தியோரா

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      இந்தியா
cong leader theora 2019 07 07

மும்பை : மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.

இப்போதுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அனைவரும் புதிய பங்களிப்பை செய்ய தயாராக இருக்கிறோம். நான் தலைவர் பதவியில் இருந்து விலகி விட்ட நிலையில் அதற்கு பதிலாக 3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம். தேசிய அளவில் களப்பணியாற்றுவதற்கான வாய்ப்பையும், அதன்மூலம் கட்சியை கட்டமைக்கவும் முடியும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மிலிந்த் தியோரா கடந்த மாதம் 26-ம் தேதி டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த பின்னர், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் இருப்பதாகவும், கட்சியின் களப்பணியில் ஈடுபட்டு கட்சியை வலுப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். இப்போது அவர் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மிலிந்த் தியோரா, சிவசேனா வேட்பாளர் அரவிந்த் சாவந்திடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து