மத்திய பட்ஜெட்: அரசின் அக்கறையை காட்டுகிறது என்கிறார் நிர்மலா சீதாராமன்

புதன்கிழமை, 10 ஜூலை 2019      இந்தியா
Nirmala Sitharaman 2019 01 23

புது டெல்லி : 2019-20 பட்ஜெட் மத்திய அரசின் அக்கறையை காட்டுகிறது என நிர்மலா சீதாராமன் கூறினார்.

மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

2019-20 பட்ஜெட் மத்திய அரசின் அக்கறையை காட்டுகிறது. செலவினங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.  உள் கட்டமைப்பு துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது.  விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றுக்கு முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தை பட்ஜெட் நிறைவேற்றியது. அரசின் செலவினங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வரி மற்றும் வரி அல்லாத வருவாயை பெருக்கும் வழிகளை ஆராய்ந்து வருகிறோம். வேலைவாய்ப்பு, தொழில் உற்பத்தி என பல்வேறு விஷயங்கள் குறித்தும் பட்ஜெட்டில் விரிவாக கூறியிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து