உலக யுனிவர்சிட்டி போட்டி இந்திய வீராங்கனைக்கு தங்கம்

புதன்கிழமை, 10 ஜூலை 2019      விளையாட்டு
indian players gold 2019 07 10

நேபிள்ஸ் : இத்தாலியில் நடைபெற்ற உலக யுனிவர்சிட்டி போட்டியில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் நகரில் உலக யுனிவர்சிட்டி போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் இந்தியா சார்பில் டுட்டி சந்த் பங்கேற்றார். அவர் பந்தைய தூரத்தை 11.32 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

யுனிவர்சிட்டி போட்டியில் இதற்கு முன் எந்தவொரு இந்திய வீரர் - வீராங்கனையும் 100 மீட்டர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது கிடையாது. 11.41 வினாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டுட்டி சந்த், 11.32 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அஜ்லா டெல் போன்ட்டே 10.33 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து