வேட்புமனுதாக்கல் நிறைவு: வேலூர் தொகுதியில் இன்று மனுக்கள் மீதான பரிசீலனை

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      தமிழகம்
vellore election 2019 07 04

வேலூர் : வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்துள்ளது. அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. .

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதுவரை 50 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து