முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்தில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வெலிங்டன் : நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் நேற்று முன்தினம் இரவு 10.35 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  இதே போல், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டிலும் நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து