முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உன்னாவ் கார் விபத்து வழக்கு: உ.பி. யில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : உன்னாவ் கார் விபத்து வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் லக்னோ, உன்னாவ் உள்ளிட்ட 17 இடங்களில் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மீது கடந்த 2017-ல் பாலியல் புகார் அளித்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு குல்தீப் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ரேபரேலியில் உன்னாவ் பெண் அவரது வக்கீல், மற்றும் குடும்பத்தினருடன் காரில் சென்ற போது லாரி மோதியது. இதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் 2 அத்தைகள் பலியாயினர். உன்னாவ் பெண்ணும், அவரது வக்கீலும் படுகாயமடைந்து லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், அந்த உன்னாவ் பெண்ணின் உடல் நிலை குறித்து அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் சந்தீப் திவாரி நேற்று அளித்த பேட்டியில், உன்னாவ் பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. நிமோனியா காய்ச்சல் அதிகரித்துள்ளது. அவரது ரத்த அழுத்தத்தை சீராக வைக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து செயற்கை குழாய் மூலமே சுவாசித்து வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை.

அவரது வழக்கறிஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது சுவாச உபகரணங்கள் இல்லாமல் தாமாக அவர் சுவாசித்து வருகிறார். ஆனாலும், அவரது நிலையும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. இருவருக்கும் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதற்கிடையே, பலாத்கார வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் சிதாபூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்தீப்பிடம் நேரில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை பல மணி நேரம் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக, ரேபரேலி சிறைச்சாலையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமாவிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர். லக்னோ, உன்னாவ், பாண்டா, பதேபூர் உள்ளிட்ட 17 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து