உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      தமிழகம்
cm edapadi 2019 08 11

சென்னை : உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

இந்தியாவிலேயே முதன் முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பு அம்மாவால் 12.12.2014 அன்று உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான தலைநகரமாக மாறி வருகிறது என்பது அனைவரும் அறியந்ததே. பிரதமர் மோடி, தனது வானொலி உரையில், உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தலைசிறந்து முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என பாராட்டியுள்ளார்.

மூளைச்சாவு அடையந்தவரின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 7 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். தமிழ்நாட்டில் இதுவரை 1297 கொடையாளர்களிடமிருந்து 7568 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து நான்காவது முறையாக தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அம்மாவின் அரசு, உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட, பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே தமிழ்நாடு மாற்றி வருகிறது.

ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்தாண்டு கை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 13-ம் நாள் உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் உடல் உறுப்பு தானம் செய்வோம்! உயிர்களை காப்போம்!” என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்வதுடன், உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக விளங்கிட செய்திடுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து