முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை குற்றம் சாட்டும் முன் உங்கள் நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துங்கள் - ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புனே : மத்திய அரசை குற்றம்சாட்டும் முன் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் உபரிநிதியான ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு அளிக்க இருக்கிறது. ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட பிமால் ஜலான் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமரும், நிதியமைச்சரும், தாங்கள் உருவாக்கிய பொருளாதார சீரழிவை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் திணறுகின்றனர். ரிசர்வ் வங்கியில் இருந்து திருடுவதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. துப்பாக்கிச்சூட்டு காயத்திற்கு மருந்தகத்தில் இருந்து பேண்டெய்டை திருடி போடுவது போல் உள்ளது இந்த செயல் எனக் காட்டமாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடியாக மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் புனேயில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திருடர்கள் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அந்த வார்த்தையை நான் திரும்பக் கூறப்போவதில்லை. காங்கிரஸ் கட்சி திருடர்கள் பட்டியலில் சிக்கி இருக்கிறது. இந்த வார்த்தையை பயன்படுத்துவதில் அவர்கள் வல்லவர்கள். நான் கேட்டுக்கொள்வதெல்லாம், ரிசர்வ் வங்கியின் மான்பைக் குலைக்கும் வகையில் பேசாதீர்கள். ராகுல் கூறும் குற்றம்சாட்டுகள் குறித்து நான் என் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை வைக்கும் முன், ராகுல் காந்தி தங்களின் கட்சியில் உள்ள நிதியமைச்சர்களுடன் ஆலோசித்து ரிசர்வ் வங்கி மீது குற்றம் சாட்டி இருக்க வேண்டும்.

பிமால் ஜலான் கமிட்டியை ரிசர்வ் வங்கி அமைத்தது, இந்த குழுவின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது வேதனைக்குரியது. இந்த குழுவில் மதிப்புமிக்கவர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது பழக்கத்தில் இல்லாத ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து