முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி வசூலிப்பு நடவடிக்கையின் போது கெடுபிடி செய்யக் கூடாது: அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

வரி வசூலிக்கும் அதிகாரிகள் கெடுபிடியாக நடந்து கொள்ள வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

2017-18ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய மறைமுக வரிகள் வாரியம், சுங்கத்துறை, வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் அதிகாரிகளுடனும், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், தொழில்களே வேலைவாய்ப்புகளையும் நாட்டின் செல்வ வளத்தையும் உருவாக்குகின்றன என்பதால் தொழில் முனைவோரின் சூழ்நிலையை வரி வசூலிப்போர் எளிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வரிவசூலிப்பு இலக்கு என்பது முக்கியமல்ல என முடிவு செய்யப்பட்டதாகவும், வரி வசூலிப்பு நடவடிக்கையின் போது, அதிகாரிகள் கெடுபிடி செய்யக் கூடாது என்றும், கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார். தொழில்துறையினர் தங்கள் தொழிலை எந்த கவலையும் இன்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஜி.எஸ்.டி. வரி குறைப்பு தொடர்பான ஒரு கேள்விக்கு அது தனது கையில் இல்லை என்றும் அதனை ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவு செய்ய முடியும் என்றும் நிர்மலாசீதாராமன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து