முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங்கில் போராட்டத்தில் வன்முறை: கூட்டத்தை கலைக்க கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஹாங்காங் : ஹாங்காங்கில் தடையை மீறிய போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. நாடாளுமன்ற கட்டடத்தின் மீது போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். ஆங்காங்கே தீவைப்பு மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் முற்றுகையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள் வீசப்பட்டன. துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, அங்கு போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் ஹாங்காங்கை உலுக்கியதை தொடர்ந்து, கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் மசோதாவை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்கின்றன.  ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக இதுவரை சுமார் 850 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த போராட்டம் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஹாங்காங் போராட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் 13 வாரங்களாக அமைதியாக நடந்து வந்த போராட்டமும், பேரணியும் தற்போது வன்முறைக்களமாக மாறியுள்ளது. இந்நிலையில் வார இறுதிநாள் போராட்டத்திற்கு ஹாங்காங் போலீசார் தடை விதித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் சாலைத் தடுப்புகளுக்கு தீ வைத்தனர். தொடர்ந்து போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதையடுத்து அவர்கள் மீது ரசாயனம் கலந்த தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. அதன் பின்னரும் கலவரம் கட்டுக்குள் வராததால் கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தப்பட்டது. போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதால் ஹாங்காங்கில் பதற்ற நிலை உருவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து