முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம் வயதில் கேப்டன் பதவியை பெற்ற ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

காபூல் : வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்டில் கேப்டனாக பதவி ஏற்றதன் மூலம், சர்வதேச அளவில் இளம் வயதில் கேப்டன் பதவியை பெற்ற வீரர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.

வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சிட்டோகிராமில் நேற்று தொடங்கியது. இதில் ரஷித் கான் முதன் முதலாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். ரஷித் கானுக்கு 20 வயது 350 நாட்கள்தான் ஆகிறது. இதன் மூலம் இளம் வயதில் டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஜிம்பாப்வேயின் தைபு 20 வயது 358 நாட்களில் இலங்கை அணிக்கெதிராக கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார். தற்போது 8 நாட்கள் வித்தியாசத்தில் ரஷித் கான் தைபுவின் சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவிற்காக பட்டோடி 21 வயது 77 நாட்களில் கேப்டனாக பொறுப்பேற்று சாதனைப் படைத்துள்ளார். பாகிஸ்தானுக்காக வக்கார் யூனிஸ் 22 வயது 15 நாட்களில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். ஸ்மித் 22 வயது 82 நாட்களில் கேப்டன் பதவியை ஏற்று சாதனைப் படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து