மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      சிவகங்கை
9 tree

சிவகங்கை- காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பில் மாபெரும் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு கல்லூரிச்செயலர் வீரப்பன் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார்.கல்லூரி முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார்.
காரைக்குடி பார்வதி அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் மணிவண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மழைநீர் சேமித்தல் குறித்த அவசியத்தையும், மழைநீர் சேமிக்கும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.மேலும் காணொளி காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். முதல்வர் கணேசன் மழைநீர் காப்போம் எனும் தலைப்பில் உரையாற்றினார்.நிகழ்ச்சியில் மாணவமாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர் மாயழகு வரவேற்றார். மாணவி சாஜிதா நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியை என்.எஸ்.எஸ்.அலுவலர் பேராசிரியர் ஜெயமணி ஏற்பாடு செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து