காங்கோவில் மாயமான இந்திய ராணுவ அதிகாரியின் உடல் ஏரியில் இருந்து மீட்பு

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019
Congo lake 2019 09 14

காங்கோ நாட்டில் பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரியின் உடல் அங்குள்ள ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சண்டை, அரசியல் நெருக்கடியில் தவிக்கும் காங்கோவில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அங்கு பணியாற்றி வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில், காங்கோவில் ஐ.நா. அமைதிப்படையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி கவுரவ் சோலங்கி, கிபு ஏரியில் படகு ஓட்டிச் சென்ற போது கடந்த சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை. அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அவரது உடல் ஏரியில் இருந்து மீட்கப்பட்டதாக ஐ.நா. செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து