முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல வரும் 20-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தொழில், வணிகம், படிப்பு சம்பந்தமாகவும், ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் பண்டிகையை தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையான  27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை என்பதாலும் முன்கூட்டியே அதாவது வெள்ளிக்கிழமை 25-ம் தேதி இரவே அனைத்து மக்களும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்காக முன்கூட்டியே ரயில்கள், பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு காத்திருக்கின்றனர்.

மேலும், கன்னியாகுமரி, செங்கோட்டை, நாகர்கோவில்,நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கனா, மும்பை, டெல்லி, ெபங்களூர், கோவை, சேலம், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்டது. மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவரிகள் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்ல தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் - நெல்லை இடையே அக்டோபர் 20,21,23 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும். நாகர்கோவில் - தாம்பரம் இடையே அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும். தாம்பரம் - திருச்சி இடையே அக்.30-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து