முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கு: முருகனின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்தது பெங்களூரு போலீஸ்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

மதுரை : பெங்களூரு தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கொள்ளையன் முருகன் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த கோபால், கணேசன் ஆகியோரை பெங்களூரு தனிப்படை போலீசார் கைது செய்தனர். கச்சைக்கட்டி கிராமத்துக்கு வந்த பெங்களூரு தனிப்படை போலீஸ் 2 பேரையும் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட முருகன் கூட்டாளிகள் இருவரிடமும் பெங்களூரு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கடை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகன் பெங்களூரு போலீஸ் பிடியில் உள்ளான். பொண்மனகெல்லி காவல் நிலையத்திற்கு உள்பட்ட வட்டாரத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் முருகனை 2-வது முறையாக காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 11-ம் தேதி காவலில் எடுக்கப்பட்ட முருகனை தமிழகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும், லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த 11 கிலோ தங்க நகைகளை பெங்களூரு போலீசார் மீட்டனர். அதே போல், கொள்ளை சம்பவத்தில் உதவ காவல்துறை அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுத்தாதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. மேலும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடித்ததாக முருகன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருந்தான். சென்னையில் சுமார் 60 இடங்களில் அவன் கொள்ளை அடித்ததாகவும் தெரியவந்துள்ளது. அதில், பஞ்சாபி நேஷனல் வங்கி கொள்ளையும் அடங்கும். இது தொடர்பாக மதுரை வாடிபட்டியில் கைது செய்யப்பட்ட கணேசனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், வங்கி கொள்ளையில் ஈடுபட்ட போது பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 470 சவரன் நகையை உருக்கி விட்டதாகவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த நிலையில், பெங்களுருவில் கொள்ளையடித்த நகைகளை தமிழகத்தில் உள்ள தமது கூட்டாளிகளிடம் கொடுத்து அதனை உருக்கி விற்று விட்டதாக முருகன் தெரிவித்திருந்தான். அதனடிப்படையில், தற்போது முருகனின் கூட்டாளிகள் இருவரை பெங்களூரு தனிப்படை போலீசார் மதுரையில் கைது செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து