முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் தேர்வு

புதன்கிழமை, 30 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர்.

ஹார்வர்டு பல்கலை கழகத்தின் பொது மேலாண்மை இதழான, ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ, 2019-ம் ஆண்டின் சிறந்த 100 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் ஆய்வு செய்து வெளியாகியுள்ள இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர். அந்த வகையில், அடோப் நிறுவனத்தை சேர்ந்த சாந்தனு நாராயண் 6-வது இடமும், மாஸ்டர்கார்டு நிறுவனத்தை சேர்ந்த அஜய் பங்கா 7-வது இடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சேர்ந்த சத்ய நாதெல்லா, 9-வது இடமும் பிடித்துள்ளனர். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவை சேர்ந்த ஜென்சன் ஹாங் முதலிடம் பிடித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து