முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நயாகரா ஆற்றில் 100 ஆண்டுகளுக்கு முன் சிக்கிய படகு வெளியே வந்தது

புதன்கிழமை, 6 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஒட்டாவா : நயாகரா ஆற்றில் 100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய படகு பலத்த சூறாவளி காற்று காரணமாக வெளியே வந்தது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த 1918-ம் ஆண்டு நயாகரா ஆற்றில் ஹார்ஸ்ஷூ அருவிக்கு அருகே சென்று கொண்டிருந்த இழுவை படகு பாறைகளுக்கு இடையே சிக்கியது. படகில் 2 பேர் இருந்தனர். அவர்களுடன் அந்த படகையும் மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இறுதியில் அந்த படகை அங்கேயே விட்டு விட்டு கயிற்றின் உதவியால் இருவரையும் கரையேற்றினர். அதன் பிறகு அந்த படகு 150 அடி ஆழத்தில் மூழ்கியது. பிரமாண்ட நீர்வீழ்ச்சியான நயாகராவின் நீரோட்டத்துக்கு அசைந்து கொடுக்காமல் கிட்டத்தட்ட 101 ஆண்டுகள் அந்த படகு சிக்கியிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்று வீசியதன் காரணமாக பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த படகு நகர்ந்து நீருக்கு வெளியே வந்தது. பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட அந்த படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் நீரால் அலைக்கழிக்கப்பட்டு இருந்தது. தற்போது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு மேலும் இழுத்து செல்லப்பட்டு அருவியிலிருந்து கீழே தள்ளப்படும் என நயாகரா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே 101 ஆண்டுகளுக்கு பிறகு நீருக்கு அடியில் இருந்து வெளியே வந்த படகினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து