பள்ளி வகுப்பறையில் டீச்சரை நாற்காலியால் தாக்கிய மாணவர்கள்

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      இந்தியா
 teacher school 2019 11 13

ரேபரேலியில் உள்ள பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையை, மாணவர்கள் நாற்காலியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் காந்தி சேவா நிகேதன் பள்ளி உள்ளது. இங்கு மம்தாதுபே என்பவர் குழந்தைகள் நல அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர்  பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து ஆசிரியை மம்தாதுபேவை சரமாரியாக தாக்கினர்.

அதில் ஒரு மாணவன் நாற்காலியை தூக்கி ஆசிரியை மீது வீசினார். மாணவர்களின் பிடியில் இருந்து மம்தாதுபே தப்பி வெளியே ஓடினார்.மாணவர்கள் ஆசிரியையை தாக்கியது வகுப்பறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கல்வி நிறுவனத்தின் மேலாளர் கூறும்போது, ஆசிரியை மம்தாதுபே மாணவர்களை ‘அனாதைகள்’ என திட்டி உள்ளார். அவர் வழக்கமாக மாணவர்களை திட்டிக் கொண்டேதான் இருப்பார். என்றார்.ஆனால் மம்தா துபே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து