முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை விசாரணை அதிகாரி ஜெனீவாவுக்கு ஓட்டம்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : ராஜபக்சே குடும்பத்துக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வந்த இலங்கை விசாரணை அதிகாரி ஜெனீவாவுக்கு ஓட்டம் பிடித்தார். 

இலங்கையில் 2005 முதல் 2015-ம் ஆண்டுவரை, ராஜபக்சே ஆட்சியின்போது நடந்த ஊழல்கள் தொடர்பாக, அவருடைய குடும்பத்தினர், உயர் அதிகாரிகள் ஆகியோர் மீது சிறிசேனா ஆட்சிக்காலத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் நிஷாந்தா சில்வா என்பவர் இந்த விசாரணையை நடத்தி வந்தார். அவர், அரசியல் உள்நோக்கத்துடன் பாரபட்சமாக நடந்துகொள்வதாக அப்போதே ராஜபக்சே கட்சி குற்றம் சாட்டி வந்தது.

இந்நிலையில், இலங்கையில் ஆட்சி மாறி உள்ளது. ராஜபக்சே சகோதரர்களால், தான் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தின்பேரில், நிஷாந்தா சில்வா ஜெனீவாவுக்கு தப்பிச்சென்று விட்டார். இத்தகவலை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

வெளிநாடு செல்வதற்கு அமைச்சக செயலாளரிடம் போலீஸ் அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல், சில்வா சென்றிருப்பதால், அவர் மீது விசாரணை நடந்து வருவதாகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து