முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை வரும் பக்தர்களுக்கு வாடகை புல்லட் - தெற்கு ரெயில்வே அறிமுகம்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளா வரும் ஐயப்ப பக்தர்கள் பம்பைக்கு சிரமமின்றி சென்று வர மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடும் திட்டத்தை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

நாடு முழுவதிலும் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதும். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பெரும்பாலும், திருவனந்தபுரம் மற்றும் செங்கனூர் ரெயில் நிலையங்களில் இறங்கி பந்தளம், பம்பை செல்வார்கள். இதற்காக செங்கனூரில் இருந்து பம்பை செல்லும் பஸ்களில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்களால் பம்பைச் சென்று, சபரிமலை சன்னிதானத்தை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது.

கேரளாவுக்கு ரெயில்களில் வரும் பக்தர்கள் சிரமமின்றி பம்பை சென்றடைய தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று வழிகள் குறித்து ஆலோசித்தது. இதில் பம்பைக்கு அருகில் இருக்கும் செங்கனூர் ரெயில் நிலையத்தில் இருந்து பக்தர்களுக்காக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட திட்டமிட்டது.

இதற்காக கொச்சியைச் சேர்ந்த கபே ரைடர்ஸ் என்ற நிறுவனத்தை தெற்கு ரெயில்வே நிர்வாகம் அணுகியது. கபே ரைடர்ஸ் நிறுவனத்தினர் கொச்சியில் மோட்டார் சைக்கிள்களை வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்கள். இவர்களிடம் செங்கனூர் ரெயில் நிலையத்தில் இருந்து பம்பை வரை செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு புல்லட் மோட்டார் சைக்கிள்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வேயின் வர்த்தக பிரிவு மேலாளர் பாலமுரளி கூறியதாவது:-

கேரளா வரும் ஐயப்ப பக்தர்கள் பம்பைக்கு சிரமமின்றி சென்று வர மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதற்காக ராயல் என்பீல்ட் நிறுவனத்துடன் பேசி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் கொச்சியைச் சேர்ந்த கபே ரைடர்ஸ், புல்லட் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள். விரைவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர் ரெயில் நிலையங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து