முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது 20 ஓவர் போட்டியில் சிக்சர் விளாசியதன் மூலம் ரோகித் சர்மா, புதிய மைல்கல்லை எட்டினார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் , 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 534 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 476 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இந்த சாதனை பட்டியலில், இந்திய வீரர், ரோகித் சர்மா 400 சிக்சர்களுடன் மூன்றாம் இடம் வகிக்கிறார்.

டெஸ்டில் 52 சிக்சர்கள், ஒரு நாள் போட்டியில் 232 சிக்சர்கள், 20 ஓவர் போட்டியில் 116 சிக்சர்கள் என மொத்தமாக 400 சிக்சர்கள் விளாசியுள்ளார் ரோகித். மேலும் இந்த ஆண்டு அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலில் ரோகித் 67 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து