உக்ரைன் பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2020      உலகம்
President refuse Ukraine PM resign 2020 01 18

கீவ் : உக்ரைனில் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் கொடுத்த ராஜினாமா கடிதத்தை அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிராகரித்ததுடன், அவரை பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

உக்ரைன் நாட்டில் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை, பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் விமர்சித்ததாக வெளியான ஆடியோ, சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உக்ரைனின் பொருளாதாரம் குறித்து பிரதமர் ஒலெக்ஸி பேசிய போது, அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு பொருளாதாரத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று பேசியதாக அந்த ஆடியோவில் உள்ளது.  ஆனால், அந்த ஆடியோவில் உள்ள தகவல் உண்மை இல்லை என்றும், செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் பிரதமர் ஒலெக்ஸி மறுப்பு தெரிவித்தார். அதே சமயம், அதிபர் மீதான மரியாதை மற்றும் நம்பிக்கை குறித்த சந்தேகத்தை போக்குவதற்காக ராஜினாமா செய்வதாக கூறினார். ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் வழங்கினார். இந்நிலையில், பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமா கடிதத்தை பரிசீலனை செய்த அதிபர், ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்தார். அத்துடன், பிரதமர் ஒலெக்ஸியும், அவரது அமைச்சரவையும் பதவியில் நீடிக்கும்படி அதிபர் கேட்டுக் கொண்டார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து