தங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      வர்த்தகம்
gold price 2020 01 22

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ.30,416 விற்பனை செய்யப்பட்டது.

இந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ. 30,416 ஆக இருந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.13 குறைந்து ரூ 3,802க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து 49.80-க்கு விற்பனை செய்யபட்டது.  அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,800 ஆக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து