இலங்கையில் ஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      உலகம்
birth child of male 2020 01 27

  மாத்தறை : இலங்கை மாத்தறையில் உள்ள மருத்துவமனையில் ஆணுக்கு குழந்தை பிறந்துள்ளது. பிரவச வலியுடன் வந்த அவரை பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.  

இலங்கையின் மாத்தறை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவர் தெற்கு மாத்துறையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார்.
தாடியுடன் வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆண்கள் வார்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர் வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறி இருந்ததால் அதிர்ச்சி அடைந்து சோதனை செய்தனர்.

எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்பதால் அவர் அந்த மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அனுப்பப்பட்டார். அப்போது வலியால் துடித்துக் கொண்டே சென்றார்.

தாடி, மீசையுடன் ஒரு ஆண் பிரசவ வார்டுக்கு வந்ததை பார்த்த மற்ற பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது, பெண்ணாக பிறந்த அந்த நபர் ஹார்மோன் சுரப்பு காரணமாக ஆண்களை போல் வாழ்ந்தார்.

தாடி. மீசை வளர்ந்ததற்கும் காரணம் அதுதான். அவர் மனதளவில் ஆணாக இருந்தாலும் உடலளவில் பெண்ணாக இருந்தார். அதனால்தான் அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடிந்தது.

ஆனாலும் அவரால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த குழந்தையை மருத்துவமனை நிர்வாகமே கவனித்து வருகிறது.

மேலும் அவர் அந்த குழந்தையை வளர்க்க விரும்பவில்லை என கூறிவிட்டார். அவரது அடையாள அட்டைகளிலும் ஆண் என்றே உள்ளது. ஆட்டோ ஓட்டுநராக உள்ள அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களை அந்த மருத்துவமனை நிர்வாகம் வெளியிட மறுத்து விட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து