எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். அதைத்தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி வாசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா 29 - ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 7 - ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு திருவிழாவை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதே போல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின்கீழ் செயல்படும் அனைத்து கோவில்களின் விழாக்களும் ரத்து செய்யப்படுகிறது. சபரிமலையில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ சிறப்பு பூஜைகள் வழக்கம் போல் நடத்தப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


