செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2020      வர்த்தகம்
Jio-Airtel-Vodafone-and-Idea 2020 04 18

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளன

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்கள் மே 3-ம் தேதி வரை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி காலத்தை நீட்டித்துள்ளன.  ஏற்கனவே ஊரடங்கை முன்னிட்டு ஏப்ரல் 17-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஊரடங்கு கடந்த 14-ம் தேதி நீட்டிக்கப்பட்டது.  வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு போதிய வசதி இல்லை என்பதால் வேலிடிட்டி காலத்தை அவை நீட்டித்துள்ளன. இதனால் ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் வேலிடிட்டி காலம் முடிந்த பின்னரும் மே 3-ம் தேதி வரை இன்காமிங் அழைப்புக்கான வசதியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று வோடபோன், ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை நீட்டித்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து