முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கலை, அறிவியல் அகாடமிக்கு இந்திய பெண் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினராக இந்திய வம்சாவளி பெண் ரேணு கத்தோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் மிகவும் மதிப்பு மிகுந்த கல்வி அமைப்பான அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினராக இந்திய வம்சாவளி பெண் ரேணு கத்தோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 61 வயதான ரேணு, ஹூஸ்டன் பல்கலைக் கழக வேந்தராகவும், பல்கலைக் கழக தலைவராகவும் உள்ளார். கல்வி துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் பிறந்த ரேணு, கான்பூர் பல்கலைக் கழகத்தில் தனது இளங்கலை பட்டத்தையும், அமெரிக்காவின் பர்டூ பல்கலைக் கழகத்தில் அரசியல், அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலை மற்றும் பி.எச்.டி பட்டங்களையும் பெற்றார். அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ரேணு கூறுகையில், 

இந்த மதிப்புமிக்க அமைப்பின் அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியளிக்கும், அதே வேளையில், ஹூஸ்டன் பல்கலைக் கழகம் மற்றும் அமெரிக்க கல்வி குழு ஆகியவற்றிற்கு இது அளிக்கும் மரியாதை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது, எனது தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதற்கு மதிப்புமிக்க வாய்ப்பை எனக்கு அளித்துள்ளது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து