முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பேச்சின் மூலமும் பரவக்கூடும் : அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிப்பு

வெள்ளிக்கிழமை, 15 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : பேச்சின் மூலமும் கொரோனா வைரஸ் பரவும் என்பது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதித்தவர்கள் பேசும் போது வைரஸ் பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் (என்.ஐ.டி.டி.கே.) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் (பி.என்.ஏ.எஸ்) புரோசிடிங்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு நபர் பேசும் போது  உருவாகும் மைக்ரோ நீர்த்துளிகள் சுமார் 12 நிமிடங்களுக்கும் மேலாக ஒரு மூடப்பட்ட இடத்தில் காற்றில் தங்கி இருக்கும், இதுவே கொரோனா பாதித்தவர் சத்தமாக பேசும் போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைரஸுடன் நீர்த்துவாலைகள் வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி வெளியேறும் வைரசுகளானது மூடிய அறையில் 8 நிமிடம் வரை காற்றில் தங்கி மற்றவர்களுக்கு பரவும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆகவே கொரோனாவிடம் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏ.சி.யில் இருந்து வெளியேறும் காற்றின் மூலம் கொரோனா பரவும் என்பது ஏற்கனவே சீனாவில் உறுதி செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதித்தவர்கள் பேசும் போது கூட வைரஸ் பரவும் என்ற தகவல் மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை முகக்கவசம் அணிந்து, சமூக இடைவேளியை கண்டுபிடித்து நம்மை நாமே தற்காத்து கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து