முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா; அமைச்சர் விஜயபாஸ்கர்

வியாழக்கிழமை, 21 மே 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,967- ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,282 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 400 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 94-ஆக உயர்ந்துள்ளது.  10 விமானங்களில் தமிழகம் வந்த 2,139 பேரில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் நேற்று ஒரே நாளில் 567 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 8,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  முதலில் கொரோனா பரிசோதனை செய்யும் போது நெகட்டிவ் என வருகிறது. மறுமுறை செய்யும் போது பாசிட்டிவ் வருவதால் சவாலாக உள்ளது. முதலில் நெகட்டிவ் ஆகி பின் வீட்டுக்கு சென்ற 25 பேருக்கு கொரோனா வந்ததால் சவாலாக உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3.72 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தற்போது 7,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.  அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 28 நாட்களாக புதிய தொற்று ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து