முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 204 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா

திங்கட்கிழமை, 25 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதைப்போல் அங்கு 7 செவிலியர் உள்பட 19 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கக்கூடியவர்களாக குழந்தைகள், ரத்த கொதிப்பு, நீரழிவு நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோர் கருதப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னையில் கர்ப்பிணி பெண்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 100 கர்ப்பிணிகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது:-

சென்னையில் கர்ப்பிணி பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 கர்ப்பிணி பெண்களும், ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் 45 கர்ப்பிணி பெண்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 கர்ப்பிணி பெண்களும், கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 29 கர்ப்பிணி பெண்கள் என, 204 கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 150 - க்கும் மேற்பட்டோருக்கு பிரசவம் நடந்துள்ளது. அந்த பச்சிளம் குழந்தைகள் அனைவருக்கும் தொற்று ஏற்படாத வகையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து