முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய உளவு விமானத்தை இடைமறித்த அமெரிக்க போர் விமானங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அலாஸ்காவின் வான் எல்லை பரப்பிற்கு அருகே பறந்த ரஷ்ய உளவு விமானத்தை அமெரிக்காவின் போர் விமானங்கள் இடைமறித்துள்ளது.

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் அவ்வப்போது எதிர் நாட்டின் எல்லைக்குள் ஆளில்லா உளவு விமானங்களை அனுப்பி எல்லைகளை கண்காணிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள அல்யூடின் தீவுகளுக்கு அருகே சுமார் 65 நாட்டிகல் மைல் தொலைவில் சர்வதேச வான் எல்லையில் ரஷ்யாவின் டியூ-142 ரக உளவு விமானம் பறந்தது. இதையடுத்து, அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எப் 22 ரக போர் விமானங்கள் அல்யூடின் தீவுகள் பகுதிக்கு விரைந்து சென்று ரஷ்ய விமானத்தை நடு வழியிலேயே இடைமறித்தன. 

ஆனால், ரஷ்ய உளவு விமானம் சர்வதேச வான்பரப்பில் பறந்து கொண்டிருந்ததால் அமெரிக்க போர் விமானங்கள் அதை திருப்பி அனுப்பியதாக அமெரிக்காவின் வடக்கு பகுதி விமானப்பாதுக்காப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் அலாஸ்கா வான் பரப்பில் ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைய முயற்சித்த சம்பவம் இது 4-வது முறை என அமெரிக்க விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து