உ.பி அமைச்சர், மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      இந்தியா
corona 2020 07 04

Source: provided

லக்னோ : உ.பி. மாநில அமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரப் பிரதேச மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங், அவரது மனைவி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சரும், அவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் தான் நன்றாகவே இருப்பதாக ராஜேந்திர பிரதாப் சிங் செய்தி ஏஜென்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார். நான் நன்றாக இருக்கிறேன், வெள்ளிக்கிழமையன்று அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் கூறும் அறிவுரையை பின்பற்றுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து