முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள் அனைத்து பாடங்களையும் எழுத அனுமதி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

பிளஸ் 2 தேர்வு எழுதாமல் உள்ள மாணவர்கள் அனைத்து பாடங்களையும் எழுதிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழா மேடை அமைக்கும் பணியினை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். மாவட்டத்தில் ரூ. 21 கோடியே 73 லட்சம் மதிப்பில் 13 திட்டங்களை தொடங்கி வைத்தும், ரூ. 76 கோடியே 12 லட்சம் மதிப்பில் 14 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்,  4,642 நபர்களுக்கு ரூ. 53 கோடியே 71 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கியும் என மொத்தம் ரூ.151 கோடியே 57 லட்சம் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து தான் உடனடியாக பிளஸ் 2 தேர்வு முடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதாத மாணவர்கள் வருகின்ற 27-ம் தேதி தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம். எத்தனை மையங்கள் தேவை என்றாலும் அத்தனை மையங்கள் ஒதுக்கப்படும். தேர்வு முடிந்ததும் உடனடியாக விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். எனவே தேர்வு எழுதாத மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. மொத்தம் 34,842 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த மாணவர்கள் 5 பாடங்களையும் எழுதவில்லை. ஒரு சிலர் நான்கு பாடங்களை எழுதவில்லை. 123 மாணவர்கள் மட்டுமே 5 பாடங்களை எழுதி உள்ளனர். ஆனாலும் அனைத்து மாணவர்களும் அனைத்து தேர்வுகளையும் எழுதிக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி வழங்கி உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி. இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பி.தங்கதுரை உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து