எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அ.தி.மு.க.வில் 29 மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அ.தி.மு.க. நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டும், கட்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சில மாவட்டங்களை, புதிய மாவட்ட கழகங்களாகப் பிரிக்கப்பட்டு, பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும், மாவட்ட கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள், கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாவட்டம், உள்வரும் சட்டமன்ற தொகுதிகள், மாவட்ட கழக செயலாளர்கள் விவரம் வருமாறு:
காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி) முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம். செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருப்போரூர், மதுராந்தகம் (தனி), செய்யூர் (தனி) திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன். சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர், ஆலந்தூர் கே.பி.கந்தன்.
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி (தனி), கும்மிடிபூண்டி சிறுணியம் பி.பலராமன். திருவள்ளூர் மத்திய மாவட்டம் மதுரவாயல், பூந்தமல்லி (தனி) அமைச்சர் பா.பென்ஜமின். திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அம்பத்தூர், ஆவடி வி.அலெக்சாண்டர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம், திருவொற்றியூர் மாதவரம் வி.மூர்த்தி. திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர், திருத்தணி பி.வி.ரமணா.
வேலூர் மாநகர் மாவட்டம் வேலூர், காட்பாடி எஸ்.ஆர்.கே.அப்பு. வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் (தனி), கீழ்வைத்தியணான்குப்பம் (தனி), அணைக்கட்டு த.வேலழகன். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் அமைச்சர் கே.சி.வீரமணி. ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, அரக்கோணம் (தனி) சு.ரவி.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மைலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி அமைச்சர் சி.வி.சண்முகம். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) இரா.குமரகுரு.
கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), சூலூர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கோவை மாநகர் மாவட்டம் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர் அம்மன் கே.அர்ச்சுணன். கோவை புறநகர் வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், அவினாசி (தனி) பி.ஆர்.ஜி.அருண்குமார்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர் கப்பச்சி டி.வினோத். திருச்சி மாநகர் மாவட்டம் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, துறையூர் (தனி) அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர், முசிறி எம்.பரஞ்ஜோதி. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி ப.குமார்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், கீழ்வேலூர் (தனி), வேதாரண்யம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி (தனி) வி.ஜி.கே.செந்தில்நாதன்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), பழனி முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன். திண்டுக்கல் மேற்கு மாவட்டம் திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்.
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் தச்சை என்.கணேசராஜா. தென்காசி வடக்கு மாவட்டம் கடையநல்லூர், சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி) சி.கிருஷ்ணமுரளி. தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி, ஆலங்குளம் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன்.
கட்சி அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உள்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கட்சிப் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உள்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


