இலங்கை பிரீமியர் லீக்: இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      விளையாட்டு
Irfan Pathan 2020 08 02

Source: provided

கொழும்பு : இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட விருப்பம் தெரிவித்து உள்ளார்.

 

இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் முதலாவது லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ம் தேதி முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரை அந்த நாட்டில் நடக்க இருக்கிறது.

இதில் கொழும்பு, கண்டி, காலே, டம்புல்லா, ஜாப்னா ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்ட 5 அணிகள் கலந்து கொள்கின்றன.  இந்த அணிகளில் இலங்கையை சேர்ந்த முன்னணி வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இடம் பெறுகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதத்தில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற இந்திய முன்னாள் ‘ஆல்-ரவுண்டர்’ இர்பான் பதான், நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் உள்பட 70 வெளிநாட்டு வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து