ராமர் கோவில் போல் அமைக்கப்படும் அயோத்தி ரயில் நிலைய முகப்பு

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      இந்தியா
Ayodhya Ram 2020 08 03

Source: provided

புதுடெல்லி : அயோத்தி ரயில் நிலையத்தை மாற்றி அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ரயில் நிலையத்தை மாற்றிஅமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.  இதற்கான மாதிரி புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, அயோத்தி ரயில் நிலைய முதற் கட்ட மறுசீரமைப்பு பணிகள்  அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என வடக்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த புதிய ரயில் நிலையம் ராமர் கோவில் போன்றே இருக்கும். இந்த நிலையத்தை நிர்மாணிக்க 2017-18 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இதைக் கட்ட சுமார் 104 கோடி ரூபாய் செலவாகும் என்றும் அவர் கூறினார். 

ரயில் நிலைய வளாகத்தின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளை சரிசெய்தல், டிக்கெட் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, காத்திருப்பு அறைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மூன்று குளிரூட்டப்பட்ட கழிப்பறைகள், 17 படுக்கைகள் கொண்ட கழிப்பறைகள், ஆண்கள் தங்குமிடம், 10 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்குமிடம் ஆகியவை கட்டப்படும். 

பிற வசதிகளில் நடை பாலங்கள், உணவு பிளாசாக்கள், கடைகள் மற்றும் கழிப்பறைகள் ஆகியவையும் கட்டப்படும். இவை தவிர, சுற்றுலா மையம், டாக்ஸி பூத் போன்றவையும் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து