Idhayam Matrimony

கல்வி நிதி விடுவிப்பதை தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம்: மத்திய அமைச்சர் மீது கனிமொழி விமர்சனம்

புதன்கிழமை, 31 டிசம்பர் 2025      தமிழகம்
Kanimozhi

சென்னை, தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ.க. அரசு ஆர்வம் காட்டுகிறது என்று திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு தி.மு.க. பாராளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று காலை தரிசனம் செய்த தர்மேந்திர பிரதான், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்துப் பேசியிருந்தார். செய்தியாளர்களுடன் பேசிய தர்மேந்திர பிரதான் கூறியதாவது:- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தமிழ் மக்களும் ஹிந்துக்களும் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை நிறைவேற்றாதது முட்டாள்தனம். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியில் தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபமேற்றுவதைத் தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார்.” எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள கனிமொழி, “தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ.க. அரசு ஆர்வம் காட்டுகிறது.” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து