ஒரத்தநாடு தி.மு.க. எம்.எல்.ஏ. ராமசந்திரனுக்கு கொரோனா

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Ramachandran 2020 08 03

Source: provided

தஞ்சை : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தி.மு.க. எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் ஒரத்தநாடு தி.மு.க. எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான ராமச்சந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து