முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 275 கோடியில் திட்டப்பணிகள்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

நெல்லை : நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 275 கோடி ரூபாய் மதிப்பிட்டிலான திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், 275 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.

மேலும் சில புதிய திட்டங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் வீட்டுமனைப் பட்டா, அம்மா இருசக்கர வாகனம், வேளாண்மை எந்திரங்கள் என அனைத்து துறைகளின் சார்பில் 5 ஆயிரத்து 982 பயனாளிகளுக்கு சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதனையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன், முதல்வர்  ஆலோசனை நடத்தினார்.

இதில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரு மாவட்டங்களின் கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

அடுத்ததாக, விவசாய சங்கங்கள்,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் பிரதிநிதிகளுடனும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து