தஞ்சை அரசு மருத்துவமனையை சீரமைக்க ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகை ஜோதிகா: அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Minister Vijayabaskar 2020 07 29

Source: provided

சென்னை : தஞ்சை அரசு மருத்துவமனைக்கு போதிய உபகரணங்கள் வாங்க நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். ரூ.25 லட்சம் நிதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடிகை ஜோதிகா வழங்கினார். 

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், மருத்துவமனையை சீரமைக்கவும் ரூ.25 லட்சம் நிதியையும் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார்.  அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாக கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார்.

இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார். ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து