முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 5914 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதார துறை அறிவிப்பு

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று 5,914 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் நேற்று 5914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 5,879 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 35 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 130 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-69) மூலமாக, நேற்று மட்டும் 67,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 32 லட்சத்து 92 ஆயிரத்து 958 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

நேற்று கொரோனா உறுதியானவர்களில், 3,532 பேர் ஆண்கள், 2,382 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,82,779 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,20,007 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.

நேற்று மட்டும் 6,037 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 675 ஆக உள்ளது. நேற்று மட்டும் கொரோனா பாதித்த 114 பேர் உயிரிழந்தனர்.

அதில், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும், 80 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 5,041 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 53,099 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 14 ஆயிரத்து 883 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 826 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 38 ஆயிரத்து 106 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து