எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு : ஜம்மு கத்ரா வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை சுமார் ஐந்து மாதத்திற்குப் பின் மீண்டும் வருகிற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடங்க இருக்கிறது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரின் அருகாமையில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாகும்.
இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாக விளங்கி வருகின்றது. வடஇந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பக்தர்கள் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வருகின்றனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குளிர்கால தலைநகரான ஜம்முவில் இருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தூரத்தில், ரேசாய் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு கத்ரா மலையடிவார முகாமில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு செங்குத்தான மலையின் வழியாக ஏறிச்செல்ல வேண்டும். ஒன்பதுநாள் திருவிழாவாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையையொட்டி இந்த ஆலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறுத்தி வைக்கப்பட்ட யாத்திரை மீண்டும் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அரசு மேலும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


