முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டெல்லி உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரும், லோக்ஜன சக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானுக்கு சமீபத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை சார்பில் முழுமையான தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் ராம்விலாஸ் பஸ்வான் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து கட்சி பணிகளை பஸ்வானின் மகன் சிரக்பஸ்வான் மேற்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து