மேலும் 5,337 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை தகவல்

செவ்வாய்க்கிழமை, 22 செப்டம்பர் 2020      தமிழகம்
corona-virus

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,52,674-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை  நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,97,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  நேற்று மட்டும் 5,406 பேர்  குணமடைந்துள்ளனர்.   

தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 76 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 8,947-ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் நேற்று ஒரே நாளில் 989 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மொத்தம் 1,57,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை 66,40,058 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 84,730 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 176 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 46,350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,33,187 பேர் ஆண்கள், நேற்று மட்டும் 3,228 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,19,457 பேர் பெண்கள், நேற்று மட்டும் 2,109 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.   பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து